search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்மெட் உத்தரவு"

    புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து நடத்திய போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று கவர்னர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார். #governorkiranbedi

    புதுச்சேரி:

    புதுவையில் ஹெல்மெட் கட்டாயத்தை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரிமணிகண்டன் ஆகியோர் சட்டமன்ற வளாகத்தில் ஹெல்மெட்டை தரையில் போட்டு உடைத்தனர்.

    இது சட்டவிரோதமானது என கிரண்பேடி வாட்ஸ்- அப்பில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புதுவையில் உயர் நீதிமன்ற உத்தரவு படி தான் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கட்டாய ஹெல்மெட் தொடர்பாக போதிய விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. இனியும் ஹெல்மெட் அணியாமல் அடம் பிடிப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.

    மேலும், தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் அபராதம் செலுத்துவோர்களின் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும்.

    புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து நடத்திய போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தி உள்ளோம்.

    இதை கட்டாயப்படுத்தாமல் இருப்பது, தளர்த்தி அமல்படுத்துவது சட்டப்படி குற்றம். கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், இச்சட்டத்தை அமல்படுத்த தடையாக இருக்கின்றனர். சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

    மத்திய மோட்டார் வாகன சட்டம், நீதிமன்ற தீர்ப்பு ஆகியவை சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் ஆகும். சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளால் நாம் கட்டுப்படத்தப்பட்டு உள்ளோம்.

    கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த முதல்-அமைச்சர் தடையாக இருப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இச்சட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HelmetCase #MadrasHC
    சென்னை:

    மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், ‘மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் நீதிபதிகள் வழங்கினர். அதேசமயம் தமிழக அரசு சார்பில் உரிய விளக்கம் அளித்ததுடன், விரிவான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் குறித்து  கூறப்பட்டிருந்தது.



    அதனைத் தொடர்ந்து நடந்த வாதத்தின்போது தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று பிற்பகல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    அப்போது, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பிக்கட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    ஹெல்மெட் அரசாணை மற்றும் அதன்பின்னர் 2015-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23-ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஹெல்மெட் விஷயத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்தும், அரசாணை குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். #HelmetCase #MadrasHC
    ×